டூவீலரில் கஞ்சா கடத்திய மூவர் கைது

ஆண்டிபட்டி:
க.விலக்கு எஸ்.ஐ., முஜிபுர் ரஹ்மான் மற்றும் போலீசார் க.விலக்கு - கண்டமனூர் செல்லும் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த டூவீலரை மறித்து சோதனை செய்தனர். இதில் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது.

விசாரணையில் டூவீலரில் கஞ்சாவுடன் வந்தவர்கள் பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டியை சேர்ந்த வசந்த் 21, திண்டுக்கல் மாவட்டம், தாமரைப்பாடி கமலபட்டியை சேர்ந்த பிரவீன் குமார் 24, என்பது தெரிந்தது.

இவர்கள் கொடுத்த தகவலில் கஞ்சா விற்பனை செய்தவர் கெங்குவார்பட்டியை சேர்ந்த வனசுந்தரி 46, என்பதும் தெரிய வந்தது.

கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

Advertisement