கத்தியை காட்டி வழிப்பறி: மூன்று சிறுவர்கள் கைது

பெரியகுளம்:
பெரியகுளம் அருகே வடுகபட்டி வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் குணசீலன் 27. தேனியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தேனியிலிருந்து பைபாஸ் ரோட்டில் டூவீலரில் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

தாமரைக்குளம் பைபாஸ் ரோட்டோரம் டூவீலரை நிறுத்தி சிறுநீர் கழித்தார்.

அப்போது குணசீலனை கத்தியை காட்டி 3 பேர் பணம் கேட்டு மிரட்டினர். குணசீலன் தன்னிடம் பணம் இல்லை என்றார். மூன்று பேரும் அவரது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை வழிப்பறி செய்து தப்பினர்.

தென்கரை எஸ்.ஐ., கர்ணன், வடுகபட்டியைச் சேர்ந்த 17 வயது 3 சிறுவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து அலைபேசியை கைப்பற்றினார்.

Advertisement