இடவசதியில்லாத செஞ்சி கிளை நுாலகம் புத்தகம் இருந்தும் படிக்க முடியாத அவலம்

செஞ்சி, ; செஞ்சி கிளை நுாலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் இடவசதி இன்றி போட்டி தேர்வு மாணவர்கள் புத்தகங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
செஞ்சி கிளை நுாலகம் 1955 ம் ஆண்டு வாடகை கட்டடத்தில் துவங்கப்பட்டது. வாடகை கட்டடம் என்பதால் அடிக்கடி இடம் மாறினர். நிரந்தர கட்டடம் கட்ட 1992 ஆம் ஆண்டு செஞ்சி முன்னாள் சேர்மன் ரங்கநாதன் 4020 சதுரடி இடத்தை தானமாக கொடுத்தார்.
அந்த இடத்தில் 625 சதுரடியில் மட்டும் சிறிய கட்டடம் கட்டினர். இந்த கட்டடம் இடிந்து போனதால் 2008ம் ஆண்டு கிருஷ்ணாபுரம் கோவிந்தசாமி தெருவில் வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்தனர்.
தற்போது நுாலகத்தில் 50 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. மத்திய மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள், தமிழக பாடநுால் கழகத்தின் 6 முதல் 12 வகுப்பு வரையிலான புத்தகங்கள், வைஃபை வசதியுடன் 7 கம்யூட்டர், ஜெரக்ஸ் மெஷின், கண்காணிப்பு கேமிரா, இன்வெட்டர் வசதி செய்துள்ளனர். இணையத்தில் புத்தகங்களை டவுன்லோடு செய்து நகல் எடுக்கவும் வசதி உள்ளது.
இத்தனை வசதிகள் இருந்தம் ஒரே நேரத்தில் 10 பேர் அமர்ந்து படிக்க இடம் இல்லை. நுாலகத்துறை மூலம் கடந்த மாதம் 4 டேபில்கள், 4 புத்தக அலமாரிகள், 24 சேர்களை கொடுத்தனர். இடவசதி இல்லாததால் அவை ஓரமாக வைக்கப்பட்டுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பிள்ளைகளை உயர் கல்வி மற்றும் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்க தயாராகி வருகின்றனர். இம்மாணவர்களால் விலை உயர்ந்த புத்தகம் வாங்க வசதி இல்லை.
நுாலகத்தில் புத்தகங்கள் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் செஞ்சி கிளை நூலகம் உள்ளது. குறுகிய தெருவில் இருப்பதால் வாகனங்கள் நிறுத்தவும் இட வசதி இல்லை.
வாசகர்களுக்கான விழாக்களும், மாணவர்களுக்கு போட்டிகள் நடந்த வும் முடிவதில்லை. எனவே மஸ்தான் எம்.எல்.ஏ., மாணவர்களின் நலன் கருதியும், கல்வி தரத்தை உயர்த்தவும் விரிவான கட்டடம் கட்ட தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது