சேலம் வரும் பா.ஜ., மாநில தலைவர் இன்று ஓமலுாரில் ஆலோசனை கூட்டம்
ஓமலுார், ஏப். 19
பா.ஜ., சேலம் பெருங்கோட்டம் சார்பில், ஓமலுாரில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், இன்று நடக்கிறது. கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம் தலைமை வகிக்கிறார். இதில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆலோசனை வழங்குகிறார். இதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மாநில தலைவராக பொறுப்பேற்று முதல்முறை சேலம் வரும் நயினார் நாகேந்திரனுக்கு, ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு நயினார் நாகேந்திரன், மக்கள் மத்தியில் பேசுகிறார். தொடர்ந்து திறந்த வேனில் ஊர்வலமாக, தங்கம் மண்டபத்துக்கு அழைத்து செல்லப்படுகிறார். இதனால் நேற்று, விழா ஏற்பாடு குறித்து, ராமலிங்கம் ஆய்வு செய்தார். மாவட்ட முன்னாள் தலைவர் சுதிர்முருகன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு