ஜி.எஸ்.டி., சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து

மறைமலை நகர்:திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்க்கு வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு 'அசோக் லேலண்ட் தோஸ்த்' சரக்கு வாகனம் ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

திருச்சியை சேர்ந்த விக்னேஷ், 28. என்பவர் ஓட்டினார். அதிகாலை 5:00 மணிக்கு

மகேந்திரா சிட்டி அருகில் வந்த போது சரக்கு வாகனத்தின் பின்புற இடது பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஜி.எஸ்.டி., சாலையின் நடுவே கவிழ்ந்தது.

விக்கேஷ் காயமின்றி தப்பினார் . மறைமலை நகர் போலீசார் விபத்து நடைபெற்ற பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கவிழ்ந்து வாகனத்தை மீட்டு அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement