போலீஸ் செய்திகள்
நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஏ.எஸ். பேட்டையை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி இந்திரா 47. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு டூவீலரிலிருந்து கணவர் இறக்கி விட்ட நிலையில் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் இந்திரா கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
செயினை பிடித்துக் கொண்டதால் ஒரு பவுன் செயினை மட்டும் பறித்து கொண்டு தப்பினர். ஒட்டன்சத்திரம் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி பலி
கன்னிவாடி: ஆர்.சி., தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜான் எட்வின் 52. டூ வீலரில் கன்னிவாடி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை மையம் அருகே வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். கன்னிவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
நீரில் மூழ்கி பலி
ஒட்டன்சத்திரம்: காவேரியம்மாபட்டியை சேர்ந்வர் தங்கவேல் 27. நண்பர்களுடன் கரட்டுப்பட்டி அருகே உள்ள ஓட்டக்குளத்தில் குளிக்க சென்றார். ஆழமான பகுதிக்கு சென்றவர் நீரில் மூழ்கி இறந்தார். ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடிய இருவர் கைது
பழநி: நிலக்கோட்டை சேர்ந்தவர் பழநி தனியார் நிறுவன காவலாளி பாலமுருகன் 50. இவரது அலைபேசி திருடு போனது. போலீசார் விசாரணையில் பழநியை சேர்ந்த ரத்தினகுமார் 46,
திண்டுக்கல் ஓ.எம்.ஆர் பட்டி சேர்ந்த ராஜா, 56, இருவரும் திருடியது தெரிந்தது. அலைபேசியை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
சூதாடிய 16 பேர் கைது
திண்டுக்கல்: வத்தலகுண்டு ரோடு கழுதை ரோடு பிரிவு அருகே சுடுகாட்டு திடலில் பணம் வைத்து சூதாடிய குடை பாறைப்பட்டி மகேந்திரன் 40, முனியப்பன் 75, மேட்டுப்பட்டி 62, ஆரோக்கியராஜ் 39, ஓய்.எம்.ஆர். பட்டி கார்த்திகேயன் 42, ஏரமநாயக்கன்பட்டி கணேசன் மூர்த்தி 55, அசனாத்புரம் முகமது அக்கீம் 29, குட்டியபட்டி பிரபு 43, ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பொன்மாந்துறை ரோடு நல்லேந்திரபுரம் பகுதியில் சூதாடிய ரெட்டியார்சத்திரம் சுரேஷ் உட்பட 8 பேரையும் கைது செய்தனர்.
கண்ணார்பட்டியில் கண்ணார்பட்டியை சேர்ந்த யுவராஜ்குமார் 30,நல்லாம்பட்டியைச் சேர்ந்த ராசு 25, கஞ்சா விற்றனர். இருவரையும் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது