சட்டப்பணிகள் ஆணைக்குழு மரக்கன்றுகள் நடும் விழா

விழுப்புரம், ; விழுப்புரம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டனர். வனத்துறை மூலம் 1000 மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் 1000 மரக்கன்றுகளும், நெடுஞ்சாலை, கிராமப்புற சாலை, பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நடப்பட உள்ளது. சட்டப்பணிகள் ஆணைக்குழு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நீதிபதிகள் லட்சுமி, ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் பத்மஜா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயனி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் உத்தண்டி, தாசில்தார் கனிமொழி, பி.டி.ஓ., சிவக்குமார், வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் சகாதேவன், ராஜகுரு, பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது