மூச்சுத்திணறலால் கல்லுாரி மாணவி இறப்பு

வால்பாறை:கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட்டைச்சேர்ந்த கல்லுாரி மாணவிஒருவர், ரொட்டிக்கடையைச்சேர்ந்த வாலிபர் ஒருவருடன், நெருக்கமாக பழகி வந்த நிலையில் நேற்று முன் தினம், மாணவிக்கு தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து, வால்பாறை போலீசார் கூறியதாவது: இறந்த மாணவிக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் இருந்துள்ளது. இந்நிலையில் வாலிபருடன் நெருக்கமாக இருந்ததன் காரணமாக, மேலும் மூச்சுத்திணறல் அதிகமானது. இதனால் தான் மாணவி உயிரிழக்க நேரிட்டது.

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நேற்றுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான், உண்மையான காரணம்தெரியும். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement