இ.எஸ். மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

விழுப்புரம்,;விழுப்புரம் இ.எஸ். மருத் துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் தீயணைப்பு துறை சார்பில் இ.எஸ். மருத்துவமனையில், மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தொண்டு நாள் வார விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி தலைமையில் முன்னணி வீரர்கள் ஷாஜகான் உள்ளிட்ட குழுவினர், தீ தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் வழங்கினர்.

ஹாஸ்பிடல் ரோடு, சிக்னல் ஆகிய இடங்களில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கினர்.

Advertisement