கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம், ; விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம், அலமேலு புரம், இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், 38 நாட்கள், கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த இலவச தொழிற்பயிற்சிக்கான நேர்முக தேர்வு 21ம் தேதி பயிற்சி மையத்தில் நடக்கிறது. 18 முதல் 45 வயது உடையவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி, அதற்கும் மேல் படித்தவர்கள் மற்றும் கிராமப்புரங்களை சேர்ந்தவர்களுக்கும், 100 நாள் வேலை திட்ட உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள், விழுப்புரம் பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், 100 நாள் வேலை திட்ட அட்டை நகல் ஆகியவற்றுடன் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 04146-294115 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது