குட்கா கடத்திய மூவர் கைது

விழுப்புரம்,; திண்டிவனம் அருகே குட்கா கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டையில் நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் தாரனேஷ்வரி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்த நபர் பையுடன் பெட்டி கடைக்குள் சென்றார். அந்த நபரை போலீசார் மடக்கி சோதனை செய்ததில், அவரிடம் அரசு தடை செய்த குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பிடிப்பட்ட நபர் வெள்ளிமேடுபேட்டை நாகராஜன் மகன் விஜயகுமார், 39; என்பதும், பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து செஞ்சி அருகே நெமிலி கிராமத்தை சேர்ந்த கிருபாகரன், 42; வந்தவாசி அருகே பழவேரி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன், 44; இருவருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

போலீசார் விஜயக்குமார், கிருபாகரன், சுப்ரமணியன் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து, 6.5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement