குவாரியில் பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அழிப்பு
டி.என்.பாளையம், ஏ
டி.என்.பாளையம் அருகே, கல்குவாரியில் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே சில மாதங்களுக்கு முன், வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்டிருந்த, தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில் முறைகேடாக உள்ளே நுழைந்து, பாறைகளை வெடி வைத்து உடைக்க முயற்சி செய்தனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கில் கல்குவாரி மேலாளர் மற்றும் உரிமையாளர் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். குவாரியில் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன், டிப்பர் லாரி, டிராக்டர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பாறைகளை வெடி வைத்து உடைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, 375 ஜெலட்டின் குச்சி மற்றும் வெடி மருந்துகளை நிபுணர்கள் உதவியுடன், பங்களாபுதுார் போலீசார் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இந்நிலையில், குவாரியில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்து, அதனை அழிப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை நிறைவேற்றுவது தொடர்பான பணிகள் நேற்று முன்தினம் நடந்தது. அதன்படி, கோவை மாநகர வெடிபொருள் கண்டறிதல் உதவி ஆய்வாளர் சத்தியன் தலைமையிலான குழுவினருடன், சத்தி டி.எஸ்.பி., முத்தரசன், கோபி தாசில்தார் சரவணன், பங்களாபுதுார் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உள்ளிட்டோர் முன்னிலையில், குவாரியில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை, பயிற்சி பெற்ற நிபுணர்கள் உதவியுடன், குவாரியின் ஒரு பகுதிக்கு எடுத்துச் சென்று, செயலிழக்க செய்தனர். பணிகள் நடைபெற்ற போது சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பிற்கான ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது