வக்ப் சட்ட திருத்தம் வாபஸ் பெறக்கோரி கடையடைப்பு

4

திருநெல்வேலி:வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி, நேற்று மேலப்பாளையத்தில் கடையடைப்பும், மாலை ஆர்ப்பாட்டமும் நடந்தது.

திருநெல்வேலி, மேலப்பாளையத்தில் அனைத்து கடைகளும் நேற்று முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயங்கவில்லை, கடைகள் மூடப்பட்டதால் பஜார் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மாலையில், சந்தை முக்கு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், தி.மு.க.,- - எம்.எல்.ஏ., அப்துல் வஹாப் உட்பட பல கட்சியினர் பங்கேற்றனர்.

Advertisement