கருட தரிசனம் காண பொதுமக்கள் ஆர்வம்

மந்தாரக்குப்பம், ; நெய்வேலி ரயில் நிலையம் அருகே உள்ள குளத்தில் கருட தரிசனம் காண வெளியூர் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கருட தரிசனம் கோடி புண்ணியம் என்றும், கருட தரிசனம் பார்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மந்தாரக்குப்பம் கடை வீதி, நெய்வேலி ரயில் நிலையம் குளம் உள்ளிட்ட பகுதிகளில் கருட தரிசனம் காண விருத்தாசலம், உளுந்துார்பேட்டை, மங்கலம்பேட்டை, அகரம், பெண்ணாடம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, வடலுார் பகுதி மக்கள் வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் கருட தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.

Advertisement