புகார் பெட்டி செய்திகள்

காய்ந்த மரத்தை அகற்ற கோரிக்கை

விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காய்ந்த மரங்கள் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

பெருமாள், சிறுபாக்கம்.

சுகாதார நிலையம் தரம் உயர்த்த கோரிக்கை

சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலம்பரசன், சிறுபாக்கம்.

கூடுதல் இருக்கைகள் தேவை

வேப்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பயனாளிகளுக்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரேமா, காட்டுமயிலூர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

ராமநத்தம் பஸ் நிலையத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜாங்கம், தொழுதூர்.

பொது கழிப்பறை வசதி தேவை

விருத்தாசலம் பெரியார் நகரில் பொது மக்கள், பயணிகள் பயனடையும் வகையில் பொது கழிப்பிடம் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவராஜ், குப்பநத்தம்.

Advertisement