சித்தாமூரில் சமுதாய வளைகாப்பு விழா

சித்தாமூர்:செங்கல்பட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி திட்டத்தின் சார்பில், சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 100 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

சித்தாமூர் ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா தலைமையில் நுகும்பல் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் அனைத்து கர்ப்பிணியருக்கும் நலங்கு வைக்கப்பட்டு பழம், புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.பி., செல்வம், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு , உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் சித்தாமூர் ஒன்றியக்குழுத் தலைவர் ஏழுமலை உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement