பைக் மோதியதில் ஏட்டு கால் முறிவு

புவனகிரி, ; புவனகிரி அருகே ரோந்து பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற ஏட்டு மீது, சென்டரிங் பலகை ஏற்றி வந்த பைக் மோதி, இடது காலில் முறிவு ஏற்பட்டது.

குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூர் அகரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் அகிலன்,33; இவர் புவனகிரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணி முடிந்து, காலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்றார்.

புவனகிரி அடுத்த வடக்கு திட்டை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, எதிரே தெற்குதெட்டை தெற்கு தெருவை சேர்ந்த அர்ஜுனன் பைக்கில் சென்ட்ரிங் பலகை ஏற்றிக்கொண்டு வந்தபோது ஏட்டு பைக் மீது மோதியது. இதில் அகிலனின் இடது கால் முறிவு ஏற்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement