குழந்தைகளுக்கு அன்பை போதிக்க வேண்டும் திருவாவடுதுறை ஆதினம் அறிவுரை

திண்டுக்கல்:''அரிவாளை எடுத்துக் கொண்டு செல்லும் அளவிற்கு காலகட்டம் இருக்கிறதென்பதால் குழந்தைகளுக்கு அன்பை போதிக்க வேண்டுமென'' திருவாவடுதுறை ஆதினம் பேசினார்.

திண்டுக்கல்லில் ஸ்ரீநமச்சிவாய மூர்த்தி தேவார பாடசாலை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது : நல்ல சொற்களை நாம் எடுத்து சொல்ல வேண்டும். உலகத்தை பற்றி, உயிர்களை பற்றி சிந்திப்பதில்லை. இரக்க குணம் வேண்டும். உதவி செய்யும் குணத்தை வளர்த்து கொள்ள வேண்டும். குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாத்து வளர்க்க வேண்டும்.

தற்போதைய காலத்தில் குழந்தைகள் அடிதடிகளில் ஈடுபடுகின்றனர். இவை குறித்து நாம் எடுத்துக் கூற வேண்டும். அரிவாளை பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லும் அளவிற்கு காலம் உள்ளது. அறியாமையில் இருக்கின்றனர். அதை மாற்ற அறிவு வளர்ச்சியடைய வேண்டும். காலத்தை வீணாக்காமல் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும். கடவுளிடம் அன்பைக் காட்டிவிட்டு உயிரினங்களுக்கு துன்பம் செய்யக்கூடாது. அன்பை போதிக்க வேண்டும் என்றார்.

Advertisement