புனித வ ௌ்ளி சிலுவைப்பாதை வழிபாடு

கடலுார்;கடலுாரில் கிறிஸ்துவ தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்த நாளை புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிப்பது வழக்கம்.

கடந்த ஞாயிறன்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்து. இதில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி பவனி வந்தனர்.

நேற்று முன்தினம் பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று புனித வெள்ளியையொட்டி, கடலுார் சாமுப்பிள்ளை நகரில் உள்ள துாய இடைவிடா சகாய அன்னை ஆலயம், கடலுார் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயம், கடலுார் கிளை சிறைச்சாலை ரோட்டில் உள்ள துாய எபிபெனி ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

அப்போது சிலுவையை சுமந்தபடி பங்கு தந்தை மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

புவனகிரி



புவனகிரி பவர் ஆப் ஜீசஸ் ஏ.ஜி.சர்ச்சில் பங்குதந்தை சாலமோன் சாமுவேல்ஜேக்கப், உளுத்துார் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் பங்கு தந்தை ஜெபஸ்டின் ஆகியோர் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இரு இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியும், விருந்தோம்பல் நிகழ்ச்சியும் நடந்தது.

Advertisement