ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இறந்து கிடந்த முதியவர்


தலைவாசல்:
தலைவாசல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், 70 வயது முதியவர், நேற்று இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி தலைவாசல் போலீசார் விசாரித்தனர். அதில் அரியலுார், குருவடியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும், திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்ததும் தெரிந்தது. மேலும் கேரளாவுக்கு கூலி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில், இரு மாதங்களுக்கு மேலாக,
இப்பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிந்தது.

Advertisement