10 ஆண்டுக்கு பின் சிக்கிய தொழிலாளி



ஓமலுார்:ஓமலுார், பஞ்சுகாளிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ், 40. தறித்தொழிலாளி. இவரது மனைவி தேவிகா, 2015ல் ஏற்பட்ட குடும்ப தகராறில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கில் நாகராஜ், பல்வேறு வாய்தாவில் ஆஜராகாமல், 10 ஆண்டாக தலைமறைவாக இருந்தார். அவர் வசித்த கிராமம் அருகே, நாகராஜூவை, நேற்று, ஓமலுார் போலீசார் கைது செய்தனர்.

Advertisement