காவேரிபுரம் அரசு பள்ளிக்கு சாலை அமைப்பதில் தாமதம்


மேட்டூர்:
காவேரிபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சாலை அமைக்கும் பணி தாமதமாவது பெற்றோர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி, சத்யாநகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் வாகனங்களில் பள்ளி வளாகத்துக்கு செல்வதற்காக, நுழைவு வாயிலில் இருந்து, 100 மீட்டர் துாரம், 5 மீட்டர் அகல மண் சாலை இறக்கமான இடத்தில் உள்ளது.


மழை காலத்தில் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து சென்று, ஆங்காங்கே சேதமடைந்து விட்டது. அந்த சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என, எம்.பி., எம்.எல்.ஏ.,வுக்கு பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். பல ஆண்டுகளாகியும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காதது, சுற்றுப்பகுதியில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement