மஞ்சள், கொப்பரை, ஆமணக்கு ஏலம்


ஆத்துார்:
ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், நேற்று முன்தினம் மஞ்சள் ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 4,235.62 குவிண்டால்(100 கிலோ ஒரு குவிண்டால்) கொண்ட, 7,010 மூட்டை மஞ்சளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர். குவிண்டால் விரலி ரகம், 13,689 முதல், 16,689 ரூபாய்; உருண்டை ரகம், 12,089 முதல், 14,829; பனங்காலி(தாய் மஞ்சள்), 25,689 முதல், 28,269 ரூபாய்க்கு விற்பனையானது. இதன்மூலம், 6.09 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட 513 குவிண்டால் மஞ்சள், இந்த வாரம் அதிகமாக கொண்டு வரப்பட்டது. குவிண்டாலுக்கு விரலி ரகம், 525 ரூபாய், பனங்காலி, 200 ரூபாய் விலை குறைந்தது. உருண்டை ரகம் மட்டும், 317 ரூபாய் விலை உயர்ந்தது.
கொங்கணாபுரம்
கொங்கணாபுரம் கிளையில் நடந்த மஞ்சள் ஏலத்துக்கு, 355 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அதன்மூலம், 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதேபோல் கொப்பரை ஏலம் நடந்தது. விவசாயிகள் 26 மூட்டைகளில் கொண்டு வந்தனர். முதல் தர கொப்பரை கிலோ, 150 முதல், 173 ரூபாய், இரண்டாம் தரம், 123 முதல், 132 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 1.39 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ஓமலுார்
ஓமலுாரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் கொப்பரை ஏலம் நடந்தது. கிலோ, 109.99 முதல், 182.19 ரூபாய் வரை ஏலம் கோரினர். 82.21 குவிண்டால் மூலம், 13.58 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
அதேபோல், 4 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட ஆமணக்கு, கிலோ, 63 முதல், 64 ரூபாய் வரை விலைபோன நிலையில், 1.30 குவிண்டால் மூலம், 8,320 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
ஒரு மூட்டை அவரை கொண்டுவரப்பட்டு, கிலோ, 68 முதல், 70 ரூபாய் வரை விலை போன நிலையில், 0.71 குவிண்டால் மூலம், 4,949 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, விற்பனையாளர் ஆனந்தி தெரிவித்தார்.

Advertisement