விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பரங்குன்றம்:
மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கணினி அறிவியல் துறை மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி, நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாணவி அசிபா வரவேற்றார். உன்னத்தி சேஞ்ச் மேக்கர் ஸ்ரீலதா பேசினார். மாணவி சுவேதா தொகுத்துரைத்தார். மாணவி மைமூன்சிபா நன்றி கூறினார். வணிகவியல் துறை தலைவர் விஜயலட்சுமி, கணினி அறிவியல் துறை தலைவர் ரோகிணி ஒருங்கிணைத்தனர்.

Advertisement