ரேஷன் அரிசி வாங்கிய புரோக்கர்கள் வீடியோ பரவியதால் விசாரணை

கெங்கவல்லி:

கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன் உள்ள கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று முன்தினம் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்ட அரிசியை, மக்கள் வாங்கிச்சென்றனர். அந்த கடையில் இருந்து, 100 அடி துாரத்தில் பெண் உள்பட, 4 புரோக்கர்கள், கிலோ, 12 ரூபாய்க்கு, 200 கிலோ வரை மூட்டைகளில் வைத்து, பைக்குகளில் கொண்டு சென்றனர்.


அரிசி வாங்கி வரும் மக்களை பாதி வழியில் நிறுத்தி, புரோக்கர்கள் அரிசியை வாங்கிச்சென்ற வீடியோ பரவியது. இதுதொடர்பாக, வட்ட வழங்கல் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர். இதுகுறித்து சேலம் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் கூறுகையில், ''விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement