தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
பனமரத்துப்பட்டி:
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கை: தமிழகத்தில், 2016ல் முதன்முதலாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் கண்டறியப்பட்டது. அதற்கு பின் வாழை, கொய்யா, சப்போட்டா, மக்காச்சோளம், மா, முந்தரி மற்றும் பல அலங்கார செடிகளில் வெள்ளை ஈ தாக்குதல் கண்டறியப்பட்டது. வெள்ளை ஈ தாக்குதலால் மகசூல் பாதிக்கப்படும்.
கட்டுப்பாடு மேலாண்மை
தென்னை ஓலைகளின் அடிப்பரப்பில் அதிக அழுத்தம் கொண்ட தெளிப்பான் மூலம் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை அகற்றலாம். என்கார்சியா ஒட்டுண்ணியை, 10 மரங்களுக்கு, 1 வீதம் வயலில் நோய் தாக்கிய தென்னங்கன்றுகளில் கட்டலாம். கிரைசோபா இரை விழுங்கி முட்டைகளை ஹெக்டேருக்கு 1,000 வீதம் இலைகளின் அடிப்பரப்பில், 30 நாட்கள் இடைவெளியில் கட்ட வேண்டும். ஹெக்டேருக்கு, 20 மஞ்சள் ஒட்டும் பொறிகளை கட்டலாம். 10 நாட்களுக்கு ஒருமுறை கவரப்பட்ட பூச்சிகளை அகற்றி மீண்டும் விளக்கெண்ணெய் தடவி வைக்க வேண்டும்.
தென்னந்தோப்புக்களில் ஹெக்டேருக்கு, 10 எண்ணிக்கையில் வாழை, சீதாப்பழம் செடிகள் நடவு செய்து, என்கார்சியா ஒட்டுண்ணியின் பெருக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். தென்னை ஓலைகளில் மேல் படிந்துள்ள கரும்பூசண படலத்தை அகற்ற, ஒரு கிலோ மைதாவை, 5 லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பின், 20 லிட்டர் நீரில் கலந்து இலைகளின் மேற்பரப்புகளில் தெளிக்க வேண்டும். ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த எந்த ஒரு பூச்சிக்கொல்லி மருந்தையும் தெளிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது