வாடிப்பட்டியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

வாடிப்பட்டி:
வாடிப்பட்டி தாலுகாவில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் சாகுபடி செய்த நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லுாரில் கால்வாய் பாசன வசதி பெறும் பகுதிகளில் விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்களை நடவு செய்தனர். தற்போது கதிர்கள் விளைந்து அறுவடையை எதிர்நோக்கி உள்ளது. இதையடுத்து விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர். கடந்த போகத்தை போல் இம்முறையும் நெற்பயிர்கள் கதிர் பிடிக்கும் பருவத்தில் காலம் தவறி பெய்த மழையால் விளைச்சல் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாய தொழிலாளி வேலுச்சாமி கூறுகையில், ''கிணற்று பாசனத்தில் முன்கூட்டியே நடவு செய்ததால் ஏக்கருக்கு 27 மூடைகள் கிடைத்தன. கால்வாய் பாசனத்தில் நடவு செய்து அறுவடை முடித்த விவசாயிகள், சமீபத்திய மழையால் மகசூல் பாதிப்பு மற்றும் வைகோல் நீரில் மூழ்கி வீணானது எனக் கூறியதாக தெரிவித்தார்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது