அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு

சித்தாமூர்:சித்தாமூர் அருகே வேட்டபெரும்பாக்கத்தில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மூன்று வீடுகள் இடிக்கப்பட்டன.
சித்தாமூர் அடுத்த வேட்டபெரும்பாக்கம் கிராமத்தில் புல எண் 25ல் 1 ஏக்கர் அரசு களப் புறம்போக்கு நிலம் உள்ளது.
அரசு புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வீடுகட்டி பட்டா இல்லாமல் வசித்து வருபவர்களுக்கு,
சிறப்பு வரன்முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க தகுதி உள்ள நபர்களை தேர்வு செய்யும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்டபெரும்பாக்கம் பகுதியில் ஆய்வு பணி நடந்து வரும் நிலையில் , இலவச வீட்டுமனை பட்டா பெறவேண்டும் என்ற நோக்கத்தில் சில தினங்களுக்கு முன் மூவர், அரசு புறம்போக்கு நிலத்தில் புதிதாக வீடுகட்ட ஆரம்பித்து ஆக்கிரமிப்பு செய்தனர்.
இதையறிந்த செய்யூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் சித்தாமூர் வருவாய் ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் நேற்று அச்சிறுப்பாக்கம் போலீசார் உதவியுடன் பொக்லைன் இயந்திரத்தால் மூன்று ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றி, அரசு நிலத்தை மீட்டனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது