சாலையோரம் கோழிக்கழிவு கொட்டி எரிப்பு
மோகனுார்:சாலையோரம் கொட்டி குவிக்கும் கோழிக்கழிவுகளை எரிப்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேட்டுடன், விபத்து அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
மோகனுார் டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்ளன. அவற்றில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்போரிடம், தினமும், காலை நேரத்தில், துப்புரவு பணியாளர்கள், துாய்மை காவலர்கள், வீடு வீடாக சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பையை சேகரிக்கின்றனர்.
அவ்வாறு சேகரித்த குப்பையை, பேட்டப்பாளையம் பஞ்.,க்குட்பட்ட பகுதியில் கொட்டி, குவித்து வருகின்றனர். இந்நிலையில், மோகனுார் - வாங்கல் செல்லும் சாலையில், செங்கத்துறை அருகே உள்ள உயர்மட்ட தரைவழி பாலம் மற்றும் வாய்க்கால் பாலம் அருகே, சாலையோரம் குப்பைகளை கொட்டி குவித்து வருகின்றனர்.
மேலும், கோழிக்கழிவுகளையும், மூட்டை மூட்டையாக கொண்டு வந்து குவிக்கின்றனர். அவ்வாறு குவிக்கப்படும் குப்பையை எரிப்பதால், புகை மூட்டம் ஏற்படுகிறது. குப்பையில் இருந்து வெளியேறும் புகை, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சலை ஏற்படுத்துக்கிறது. மேலும், துர்நாற்றத்தால், மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை நீடிக்கிறது. குறிப்பாக, அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், புகைமூட்டம் மற்றும் துர்நாற்றத்தால் நாள் முழுவதும் மூக்கை பிடித்துக்கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அதேபோல், குப்பை எரிப்பதால் எழும் புகை, சாலையை மறைத்துக் கொள்வதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதனால், உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். சுகாதார சீர்கேடு மற்றும் விபத்து அபாயம் ஏற்படுத்தும் குப்பையை அகற்றுவதுடன், கழிவுகளை கொட்டி வரும் நபர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது