உயரம் குறைவான தடுப்புச்சுவர்விபத்துக்கு முன் உயர்த்தப்படுமா



மல்லசமுத்திரம்:கட்டிபாளையத்தில், சாலையோரம் உள்ள குவாரி பள்ளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் உயரம் குறைவாக உள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மல்லசமுத்திரம் யூனியன், மரப்பரை கிராமத்திற்குட்பட்ட, கட்டிபாளையம் பகுதியில், 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இக்குவாரிகளுக்கு கற்களை வெட்டி எடுத்ததால், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், எலச்சிபாளையம்-சோமணம்பட்டி சாலையோரத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக தினமும் இரவு, பகல் என, பாராமல் எண்ணற்ற டிப்பர் லாரிகள்,


இருசக்கர, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி பாலியை ஒட்டி உள்ள சாலையோரம் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இதன் உயரம் குறைவாக இருப்பதால், இரவில் வரும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது. உயிர்சேதம் ஏற்படும் முன், தடுப்பு சுவரை உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement