போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்கு


ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சாப்பரானப்பள்ளியில் உள்ள கோவில் அருகே தனிநபர் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை அகற்றக்கோரி, நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் செல்வம் உட்பட, 30 பேர் மீது தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல், கெலமங்கலம் அருகே தம்மாண்டரப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவன நுழைவு வாயில் முன் நேற்று முன்தினம் நடந்த போராட்டம் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வம் உட்பட, 30 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.A

Advertisement