மதுரையில் 103 டிகிரி: தமிழகத்தில் உச்சம்

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:

தமிழகம் உள்ளிட்ட தென்மாநில பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இடி, மின்னலுடன், மணிக்கு, 40 கி.மீ., வரையிலான வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக, வெப்பம் பதிவாகலாம். வெப்பம் அதிகரிப்பு காரணமாக, பகல் நேரத்தில் வெளியில் செல்வோருக்கு, அசவுகரியம் ஏற்படும். தமிழகத்தில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலைய பகுதியில், 103 டிகிரி பாரன்ஹீட், வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

Advertisement