அங்கன்வாடி மையத்தில் கெட்டுப்போன முட்டைகள்
கெலமங்கலம்:
கெலமங்கலம் அருகே, அங்கன்வாடி மையத்திற்கு வழங்கப்பட்ட முட்டை கெட்டுப்போய் இருந்ததால் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஜெக்கேரி பஞ்., உட்பட்ட சின்னட்டி கிராமத்தில், அங்கன்வாடி மையம் இயங்குகிறது. இங்கு, 25 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர். அங்கன்வாடி பணியாளராக மாரம்மா என்பவர் உள்ளார். வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய, 3 நாட்கள் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது.
அதற்காக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, தினேஷ் என்பவர் மூலம், 75 முட்டைகள் அங்கன்வாடி மையத்திற்கு வழங்கப்படுகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை வழங்கப்பட்ட முட்டைகளை நேற்று முன்தினம் அங்கன்வாடி மையத்தில் வேக வைக்க எடுத்தனர். 12 முட்டைகள் கெட்டு போயிருந்தன. அதனால் மீதமுள்ள முட்டைகளை வேக வைத்தனர். அதுவும் கெட்டு போயிருந்ததால் குழந்தைகளுக்கு கொடுக்கவில்லை.
தகவலறிந்த பெற்றோர் அங்கன்வாடி மையத்தில் திரண்டு, குழந்தைகளுக்கு இதுபோன்ற கெட்டுப்போன முட்டைகளை சப்ளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என, கொந்தளித்தனர். குழந்தைகள் கெட்டுப்போன முட்டைகளை சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது என கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து உடனடியாக அங்கன்வாடி மையத்திற்கு கெட்டுப்போன முட்டைகளுக்கு பதிலாக, 25 முட்டைகள் புதிதாக வழங்கப்பட்டன. அவற்றை வேகவைத்து குழந்தைகளுக்கு வழங்கினர். கெலமங்கலம் ஒன்றியத்தில் கடந்த வாரம் அங்கன்வாடிகளுக்கு சப்ளை செய்யப்பட்ட முட்டைகளில் பெரும்பாலும் கெட்டுப்போன முட்டைகள் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது