மள்ளர் மீட்பு கழக தலைவருக்கு பாலியல் வழக்கில் 'குண்டாஸ்'

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் மள்ளர், 47. மள்ளர் மீட்பு கழகம் என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தார். அப்பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில், அத்துமீறி நுழைந்த செந்தில் மள்ளர், தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றுள்ளார். அவர் கூச்சலிடவே செந்தில் மள்ளர் தப்பியோடிவிட்டார்.

வழக்கு பதிவு செய்த கழுகுமலை போலீசார், செந்தில் மள்ளரை கடந்த மாதம் 27ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு, மாவட்ட எஸ்.பி. ஆர்பர்ட் ஜான் பரிந்துரை செய்தார். கலெக்டர் இளம்பவகத் உத்தரவின்படி, செந்தில் மள்ளர் நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement