ஓய்வு பெற்ற நீதிமன்றபணியாளர் வீட்டில் திருட்டு




பெருந்துறை:பெருந்துறை அடுத்த, முள்ளம்பட்டி கோர்ட் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60. இவர், மாவட்ட நீதிமன்றத்தில் சுருக்கெழுத்து தட்டச்சராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த, 3ம் தேதி மனைவியுடன், சென்னையிலுள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.


இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜேந்திரனுக்கு மைத்துனர் ராஜா, போன் செய்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்து இருந்த, 26 ஆயிரம் ரூபாய், கை கடிகாரம் மற்றும் மொபைல்போன் திருட்டு போய் உள்ளதாக தெரிவித்தார்.
காஞ்சிக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement