இரு ஜாக்கிகள் திருட்டுகோபியில் வாலிபர் கைது




கோபி:கோபி அருகே, இரு இரும்பு ஜாக்கிகளை களவாடி, தப்பிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ, 25. இவர் சாலை போடும் நிறுவனத்தில் மேற்பார்வையாராக பணிபுரிகிறார். இந்நிலையில் சத்தி சாலையில், கோபிபாளையம் பிரிவு என்ற இடத்தில், நேற்று வேலை செய்து கொண்டிருந்தார்.


அப்போது மதியம், 2:30 மணிக்கு மொபட்டில் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த ஜாக்கி என்ற இரு இரும்பு முட்டுகளை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள், அந்த மர்ம நபரை மொபட்டுடன் மடக்கி பிடித்து கடத்துார் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சிக்கிய நபர் சத்தி அருகே காராப்பாடியை சேர்ந்த கார்த்திக், 25, என தெரியவந்தது. இதுகுறித்து இளங்கோ கொடுத்த புகார்படி, கார்த்திக்கை கடத்துார் போலீசார் கைது செய்தனர்.

Advertisement