கத்தியை காட்டி மிரட்டியதோடு பெண் சேலையை இழுத்தவர் கைது


சேலம்:

சேலம், மல்லமூப்பம்பட்டி, மேல்பாறைக்காட்டை சேர்ந்தவர் மாதேஷ், 46. ஆண்டிப்பட்டியில் கரும்பு ஜூஸ் கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு கடையில் இருந்தபோது, ஒருவர் வந்து மாதேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால், மாதே ைஷ தாக்கி மீண்டும் பணம் கேட்டார்.

அப்போது மாதேஷின் சகோதரி வந்து, தாக்குதலை தடுத்தார். அவரது சேலையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தி அந்த வாலிபர் மிரட்டினார். அருகில் இருந்தவர்கள் வந்ததும், அந்த வாலிபர் தப்பிவிட்டார். இதுகுறித்து மாதேஷ் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்ததில், தளவாய்பட்டி, சின்ன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ், 33, என தெரிந்தது. அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement