உருட்டுக்கட்டையால் அடித்து கணவரை கொன்ற மனைவி
ஆத்துார்:
தம்பியை தாக்கியதில் ஆத்திரமடைந்த மனைவி, கணவரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்தார். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி, செங்கட்டை சேர்ந்தவர் கோபால், 33. கட்டட தொழிலாளி. இவருக்கு பவித்ரா, 27, ராமலட்சுமி, 25, என, இரு மனைவிகள், இரு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு, 7:00 மணிக்கு, முதல் மனைவியின் தம்பி மஞ்சுநாத், 25, என்பவரை, கோபால் அடித்துள்ளார். இதைப்பார்த்த பவித்ரா, உருட்டுக்கட்டையால் கோபால் தலையில் அடித்துள்ளார். அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின் அதிர்ச்சி அடைந்த பவித்ரா, மஞ்சுநாத், தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு பவித்ரா, 'கணவரை தாக்கியதில் காயம் அடைந்தார்' என கூறினார். போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, கோபால் இறந்து கிடந்தது தெரிந்தது. பின் கொலை வழக்குப்பதிவு செய்து, பவித்ரா, மஞ்சுநாத்திடம் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது