தாலியை கழற்றி வைத்துவிட்டு குழந்தையுடன் பெண் மாயம்
சேலம்:
காரிப்பட்டி, வெள்ளம்பட்டியை சேர்ந்தவர் மாயவன், 51. இவரது மனைவி மோகனா, 41. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 16ல் மோகனா, குழந்தையுடன், அனுப்பூரில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின் வீடு திரும்பவில்லை. அவர் அணிந்திருந்த தாலியை, வீட்டில் கழற்றி வைத்து விட்டு, அவரது ஆதார் கார்டை மட்டும் எடுத்துச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து மாயவன், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
வாழப்பாடி அடுத்த பேளூரை சேர்ந்தவர் ராஜ்குமார், 26. கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரியா, 21. இவரை, ராஜ்குமார், 3 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
தம்பதி இடையே கருத்து வேறுபாடால், மனமுடைந்த பிரியா, கன்னங்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, 3 மாதங்களுக்கு முன் வந்துவிட்டார். ஆனால் கடந்த, 15ல் வீட்டில் இருந்து வெளியேறிய பிரியா, வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராஜ்குமார் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் தேடுகின்றனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது