சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பாக மரக்கன்று நடும் விழா
நல்லம்பள்ளி::மாவட்ட நிர்வாகம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, வனத்துறை மற்றும் போலீசார் இணைந்து நடத்திய, மரக்கன்று நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாமை, முதன்மை மாவட்ட நீதிபதி திருமகள் நேற்று தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பஞ்.,க்குட்பட்ட சேசம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் அங்குள்ள ஏரியில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் சதீஸ், 43 பயனாளிகளுக்கு, 34.48 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு துறைகளின் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதன்மை மாவட்ட நீதிபதி திருமகள் பேசியதாவது:
சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன், சேசம்பட்டி பகுதியில், 250-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள், வனத்துறையினர், தன்னார்வலர்கள் இணைந்து பராமரித்து, மரங்களாக வளர்த்தெடுக்க வேண்டும்.
குக்கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் மற்றும் பாமரர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தை அணுகி, மனு அளித்து தங்களுக்கான சட்ட உதவிகளை இலவசமாக பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், மாவட்ட
எஸ்.பி., மகேஸ்வரன், டி.ஆர்.ஓ., கவிதா, கூடுதல் கலெக்டர் கேத்தரின் சரண்யா, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், ஆர்.டி.ஓ., காயத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது