வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடைபயணம்
புதுக்கோட்டை,:புதுக்கோட்டை வழியாக, வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடைபயணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர்.
தமிழகத்தில் சிவாலயங்களில் புகழ் பெற்றது தையல்நாயகி உடனுறை வைத்தியநாதசுவாமி, செல்வ முத்துக்குமாரசாமி, பரிகார தலமாகவும் இருந்து வருகிறது.
கீழசீவல் பட்டியில் மற்றும் பிற பகுதிகளில் இருந்து, பல ஆண்டுகளாக பக்தர்கள் நடைபயணமாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதில், காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டிகள் பல்வேறு கிராமங்களில் இவர்கள் கூட செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு வழக்கம் போல் நேற்றுமுன் தினம் கீழசெவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள்; நடைபயணமாக புறப்பட்டனர்.
தொடர்ந்து, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை வழியாக, பூண்டிக்கு சென்று அங்கிருந்து, மூவலூருக்கும் செல்கின்றனர். பின்னர், மயிலாடுதுறை வழியாக, வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஏப். 22ம்தேதி நடைபயணமாக சென்றடைவர். அங்கு சிறப்பு பிரார்த்தனைகள், கூட்டு வழிபாடுகள், நேர்த்திகடன்கள் செலுத்துதல் மேற்கொள்கின்றனர்.
தொடர்ந்து, வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடைபயணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணத்தை முன்னிட்டு, போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும், பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில், செல்லும் வழிகளில் பக்தர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது