மது, புகையிலை விற்ற 5 பேர் கைது
ஈரோடு::ஈரோடு மாவட்ட அளவில், சட்ட விரோதமாக மது, தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் மது விற்பனை செய்ததாக, பெருந்துறை ரயில்வே ஸ்டேஷன் அருகே அதே பகுதியை சேர்ந்த விக்ரம், 38, என்பவரை வெள்ளோடு போலீசார் கைது செய்தனர்.தாளவாடி சூசையபுரத்தில், கர்நாடகா மது பாட்டில்களை விற்க கடத்தி வந்த தொட்டகாஜனுார் மனோகர்லால் ஜெயின், 50, என்பவரை தாளவாடி போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மேட்டூர் சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்றவற்றை விற்றதாக, ஈரோடு பெரியவலசு வெள்ளியங்கிரி, 63, என்பவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.நம்பியூரில் சுந்தர்ராஜ்,45, பெருந்துறையில், நிர்மலாதேவி,50, ஆகிய இருவரையும் புகையிலை பொருட்கள் விற்றதாக கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 40 பாட்டில்கள், 1,100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது