வெள்ளாடு திருடர்களுக்கு வலை

பெரம்பலுார்:பட்டியில் அடைக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளாடுகளை திருடி சென்றவர்களை மங்கலமேடு போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், கத்தாழைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, 55; விவசாயியான இவர், 68 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் மேய்ச்சலுக்கு பின்னர், வயலில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை, மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதற்காக கருப்பையா பட்டிக்கு வந்தபோது, ஆடுகள் திருடு போனது தெரியவந்தது. தான் வளர்த்து வந்த அனைத்து ஆடுகளும் திருடு போனதால் விவசாயி கருப்பையா வேதனையடைந்தார். கருப்பையா புகாரில், மங்கலமேடு போலீசார் ஆடு திருடர்களை தேடி வருகின்றனர்.

Advertisement