சமயபுரம் மாரியம்மன் கோவில் கம்பம் நடும் விழா
ஈரோடு::ஈரோடு, பூந்துறை சாலை, கெட்டி நகரில் உள்ள செல்வ விநாயகர், சமயபுரம் மாரியம்மன், பாலமுருகன் கோவிலில் பூச்சாட்டு மற்றும் பொங்கல் விழா நடந்து வருகிறது.
கடந்த, 15ல் பூச்சாட்டுதல் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கம்பம் எடுத்து வரப்பட்டு, 9:30 மணிக்கு கம்பம் நடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று முதல் தினமும் சமயபுரம் மாரியம்மனுக்கு காலை, 11:30 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜை, கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு நடக்கிறது. வரும், 25 மாலை விளக்கு பூஜை, 29ல் பரிசல் துறை சென்று தீர்த்தம் எடுத்து வருதல் நடக்க உள்ளது.
வரும், 30 அதிகாலை, 5:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், 8:00 மணி முதல் அன்னதானம், மாலையில் மாவிளக்கு பூஜை, அம்மன் திருவீதி உலா நடக்கிறது. மே, 1 காலை, 7:00 மணிக்கு கம்பம் எடுத்தலும், அன்று இரவு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது