ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிநாளை வீரர், வீராங்கனைகள் தேர்வு
ஈரோடு::ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நாளை (20) நடக்க உள்ளது.இதுபற்றி, ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் சுரேந்திரன், வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு ஆண்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், பெண்களுக்கான தேர்வு போட்டி நாளை மாலை, 4:00 மணிக்கு ஈரோடு திண்டல் வித்யா நகர் கே.எஸ்.கிரிக்கெட் நெட்டில் நடக்க உள்ளது. தேர்வு போட்டியில், 2013, ஆக., 31க்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம்.
அதே இடத்தில் ஆண்களுக்கான தேர்வு போட்டி வரும், 22ல் நடக்கிறது. 2006 ஜூன், 1 க்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ள கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் ஆதார் கார்டு, சீருடை, ஷூ, விளையாட்டு உபகரணங்களுடன் பங்கேற்கலாம்.
கூடுதல் விபரத்துக்கு, 94437 28266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது