பணத்தை அபேஸ் செய்த வாலிபர் இருவர் கைது

கரூர்:
கரூர் அருகே, பஸ்சில் ஏற முயன்றவரிடம் பணத்தை அபேஸ் செய்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர், தான்தோன்றிமலை வடக்கு தேர்வீதியை சேர்ந்தவர் வினோத், 41; இவர், நேற்று முன்தினம் தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப்பில் இருந்து, கரூர் செல்ல பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது, திருச்சியை சேர்ந்த ரஞ்சித் குமார், 27, புதுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ், 44, ஆகியோர், வினோத் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த, 200 ரூபாயை பிக்பாக்கெட் அடித்துள்ளனர்.
அப்போது, அவர்களை பிடித்த வினோத், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, இரண்டு பேரையும், தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.

Advertisement