மாமியாருக்கு அடி: மருமகன் கைது


கரூர்:க.பரமத்தி அருகே, மாமியாரை அடித்ததாக, மருமகனை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்த மதுரை வீரன் என்பவரது மனைவி பழனியம்மாள், 45; திருச்சி நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள், சுகன்யாவை கடந்தாண்டு, கரூர் பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக், 31; என்பவர் திருமணம் செய்துள்ளார்.


கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது சுகன்யா தாய் பழனியம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த, 16ல் கார்த்திக், மாமியார் பழனியம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, மாமியார் பழனியம்மாளை தகாத வார்த்தை பேசி, கார்த்திக் அடித்துள்ளார். இதுகுறித்து, பழனியம்மாள் அளித்த புகாரின்படி, க.பரமத்தி போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement