மரக்கன்றுகளை இலவசமாக பெற்று பொதுமக்கள் நடவு செய்ய வேண்டும்


கரூர்:
''கரூர் மாவட்டத்தில், பொதுமக்கள் மரக்கன்றுகளை இலவசமாக பெற்று, நடவு செய்ய வேண்டும்,'' என, கலெக்டர் தங்கவேல் பேசினார்.
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மரக்கன்றுகள் நடுதல், இலவச சட்ட ஆலோசனை உதவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, குமாரபாளையத்தில் நேற்று நடந்தது. அதில், கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில், பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில், பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரங்கள் ஆக்சிஜனை வழங்குவது மட்டுமின்றி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், மண்ணை பாதுகாக்கவும் உதவுகிறது. வனத்துறை சார்பில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்யப்படுகிறது. 2.25 லட்சம் பனை விதைகள், கரூர் மாவட்டம் முழுவதும் நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. அதை மக்கள் பெற்று, நடவு செய்து பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தலைமை நீதிபதி சண்முக
சுந்தரம், தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயப்பிரகாஷ், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா,
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனுராதா, திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, வன அலுவலர் சண்முகம், அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர். பிறகு, கரூர் அரசு கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று கள் நடும் பணிகள் நடந்தன.

Advertisement