கிருஷ்ணராயபுரம் பகுதியில் சூரியகாந்தி பூக்கள் அறுவடை
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சூரியகாந்தி பூக்கள் அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட மலையாண்டிப்பட்டி, பாப்பகாப்பட்டி, வயலுார், சரவணபுரம், புனவாசிப்பட்டி, வரகூர், திருமேனியூர், பஞ்சப்பட்டி, கரட்டுப்பட்டி, பறைப்பட்டி, சேங்கல், லட்சுமணம்பட்டி, வீரியபாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் பரவலாக சூரியகாந்தி சாகுபடி செய்திருந்தனர். சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்பட்டது.
தற்போது செடிகளில் உள்ள பூக்களை, விவசாயிகள் அறுவடை செய்து களத்தில் கொண்டு வந்து வெயிலில் உலர்த்தி வருகின்றனர்.
உலர்த்தப்பட்ட விதையுள்ள பூக்களை, டிராக்டர் இயந்திரம் கொண்டு விதைகள் தனியாக பிரிக்கப்படுகிறது. இந்த விதைகளை தரம் பிரித்து, வியாபாரி களிடம் விவசாயிகள்
விற்பனை செய்கின்றனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது