போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு


கரூர்:
கரூர் டவுன் போக்குவரத்து போலீசார் சார்பில், ெஹல்மெட் குறித்த விழிப்புணர்வு பிரசாரம், காமராஜர் தினசரி மார்க்கெட் நுழைவு வாயிலில் நேற்று மாலை நடந்தது.
அதில், டூவீலர்களில் செல்பவர்கள் ெஹல்மெட் அணிவதன் அவசியம், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது குறித்து, போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,க்கள் சரவணன், அர்ஜூன் ஆகியோர் விளக்கம் அளித்து பேசினர். பிறகு, பொதுமக்களுக்கு, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Advertisement